Best Editing Appsநம்மில் பலருக்கும் போன்களில் எடிட் செய்வது என்பது பிடித்தமான ஒன்று. அவர்கள் பல விதமான ஆப்ஸ்களையும் தங்களுடைய போன்களில் பயன்படுத்தி அதன்மூலம் எடிட் செய்வதுண்டு. இருப்பினும், போன்களில் எடிட் செய்ய விருப்பப்படுபவர்களுக்காகவே நாங்கள் ஒரு 3 சூப்பரான ஆப்ஸ் பற்றி உங்களுக்கு சொல்ல போகிறோம். அது என்னென்ன ஆப்ஸ் என்பதை பற்றி கீழே தெரிந்துகொள்ளுங்கள்…
Picsart
புகைப்படங்களை நன்றாக எடிட் செய்யவேண்டும் என்று விரும்புபவர்களுக்கு ‘Picsart’ ஒரு நல்ல ஆப்ஸ் என்று கூறுவோம். ஏனென்றால், Picsart மூலம் திருமண நிகழ்ச்சிகளுக்கு நீங்கள் பேனர் கூட எடிட் செய்யலாம். அதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை வைத்து புகைப்படங்களை தேர்வு செய்து கட்-அவுட் செய்து உங்களுக்கு தேவையான background புகைப்படங்களை வைத்து கொள்ளலாம்.
Read More –AMOLED டிஸ்ப்ளே…108MP ரியர் கேமரா… மலிவு விலையில் அறிமுகமான POCO X6 Neo!
அது மட்டுமின்றி, நீங்கள் புகைப்படம் எடுத்த புகைப்படங்களில் உங்களுடைய முகத்தின் கலர் சற்று குறைவாக இருந்தாலும் கூட அதில் கொடுக்கப்பட்ட டூல்ஸ்களை வைத்து முகத்தை கலர் ஆக்கலாம். அதனைப்போலவே உங்களுக்கு எதாவது லோகோ செய்யவேண்டும் என்றால் கூட நீங்கள் இந்த ஆப்ஸ் மூலம் எடிட் செய்யலாம்.
kinemaster
பலரும் ஸ்டேட்டஸ் வைப்பதற்காக வீடியோக்களை எடிட் செய்து யூடியூப் சேனல்களில் பதிவிட விரும்புவது உண்டு. அப்படி பட்டவர்கள் நல்ல ஒரு எடிட்டிங் ஆப் தேடிக்கொண்டு இருந்தீர்கள் என்றால் உங்களுக்காகவே நாங்கள் சொல்ல போகும் ஆப்‘kinemaster ‘இதில் நீங்கள் விரும்பி கொள்வது போல மற்ற படங்களின் காட்சிகளை எடுத்து இதற்குள் பதிவேற்றம் செய்து உங்களுக்கு பிடித்த பாடல்களை எடிட் செய்து கொள்ளலாம்.
Read More –இந்தியாவில் லாஞ்ச் ஆனது iQOO Z9 5G ! விலை எவ்வளவு தெரியுமா ?
அதைப்போல உங்களுடைய தெரிந்தவர்களுக்கு பிறந்த நாள் அல்லது திருமணம் நாள் வாழ்த்துக்களை தெரிவிக்கவேண்டும் என்றாலும் கூட அதிலே அதற்கான Template-ம் கொடுக்கப்பட்டு இருக்கும். அதில் சென்று உங்களுக்கு தேவையான புகைப்படங்களை கொடுத்து கூட நீங்கள் எடிட்டி செய்து கொள்ளலாம்.
Cap Cut
இப்போது இருக்கும் காலகட்டத்தில் ரீல்ஸ் எடுப்பது என்பது மிகவும் சாதாரணமான ஒரு விஷயமாகிவிட்டது. வீடியோவை எடுத்துவிட்டு அதனை எடிட் செய்யவே பலரும் பயன்படுத்தி வரும் ஒரு ஆப் என்றால் Cap Cut தான். இந்த Cap Cut -ல் பல வகையான FX இருக்கிறது. அதனை பயன்படுத்தி நீங்கள் உங்களுடைய வீடியோக்களை வேற லெவலில் எடிட் செய்து கொள்ளலாம். அதைப்போலவே, இதில் பல வகையான Template-ம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. எனவே ரீல்ஸ் செய்து வீடியோக்களை வெளியீடுபவர்களுக்கு இந்த ஆப் கண்டிப்பாக பயனுள்ளதாக இருக்கும்.
Read More :-பாரத் மேட்ரிமோனி, ஷாதி உள்ளிட்ட பிரபலமான 10 இந்திய ஆப்ஸ்களை அதிரடியாக நீக்கும் கூகுள்
மேற்கண்ட இந்தkinemaster,Cap Cut,Picsartமூன்று ஆப்களும் கூகுள் பிளே ஸ்டோரில் இருக்கிறது. எனவே, விருப்பம் இருப்பவர்கள் அதில் சென்று பதிவிறக்கம் செய்துவிட்டு உங்களுடைய புகைப்படங்களை எடிட் செய்து மகிழுங்கள்.
