பிளாக்பெரி அத்னா(blackberry athena) ஸ்மார்ட்போன் மாடல் பற்றிய பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளத. அதன்படி இந்த ஸ்மார்ட்போன் மாடல் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. குறிப்பாக தொடுதிரை வசதி மற்றும் க்வெர்டி கீபேட் போன்ற பல்வேறு வசதிகள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
unknown nodeபிளாக்பெரி நிறுவனம் அடுத்த இரண்டு மாதங்களில் இந்த பிளாக்பெரி அத்னா ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.
தற்சமயம் பிளாக்பெரி சார்பாக வெளியிடப்பட்ட அத்னா ஸ்மார்ட்போன் புகைப்படத்தில் வழக்கமான க்வார்டி கீபேட் வடிவமைப்பு மற்றும் டூயல் ரியர் கேமரா போன்ற பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது. பிளாக்பெரி அத்னா ஸ்மார்ட்போன் பொதுவாக 18:9 என்ற திரைவிகிதம் மற்றம் 1080பிக்சல் தீர்மானம் அடிப்படையில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
unknown nodeஅத்னா ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். இந்த ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
unknown nodeவீடியோ கேம் மற்றும் ஆப் வசதிகளுக்கு இந்த ஸ்மார்ட்போன் அருமையாக இருக்கும். வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம், சென்சார் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.
பிளாக்பெரி அத்னா ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலைப் பற்றிய விவிரங்கள் வெளிவரவில்லை.