ஸ்னாப்டிராகன் 8 Gen..100W ஃபாஸ்ட் சார்ஜிங்.! வருகிறது OnePlus-ன் புதிய மாடல்.!

ஒன்பிளஸ் ஏஸ் 3 ப்ரோ : கடந்த சில மாதங்களுக்கு முன்பு சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட 'ஒன்பிளஸ் ஏஸ் 3' ஸ்மார்ட்போனின் அடுத்த வெறியன்ட் ஆன, ஒன்பிளஸ் ஏஸ் 3 ப்ரோ

OnePlus Ace 3 Pro 2 (1)

ஒன்பிளஸ் ஏஸ் 3 ப்ரோ :கடந்த சில மாதங்களுக்கு முன்பு சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட ‘ஒன்பிளஸ் ஏஸ் 3’ ஸ்மார்ட்போனின் அடுத்த வெறியன்ட் ஆன, ஒன்பிளஸ் ஏஸ் 3 ப்ரோ விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒன்பிளஸ் நிறுவனம் அவ்வப்போது, புதிய அம்சங்களுடையஸ்மார்ட்போன்களை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு ஏஸ் ஸ்மார்ட்போன்களின் வரிசையில், ஒன்பிளஸ் ஏற்கனவே இரண்டு மாடல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஏஸ் 3 மற்றும் ஏஸ் 3வி ஆகும். இப்போது, ​​ஒன்பிளஸ் வரிசையின் அடுத்தமாடலான ஒன்பிளஸ் ஏஸ் 3 ப்ரோவுக்குத் தயாராகி வருகிறது.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் சினாவில்OnePlus Ace 3-யை அறிமுகம் செய்தது ஒன்பிளஸ் நிறுவனம். இந்தஸ்மார்ட்போனானது இந்தியாவில் ஒன்பிளஸ் 12ஆர் எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது.விரைவில் ஒன்பிளஸ் ஏஸ் 3 ப்ரோவை சீனாவில் ஜூலை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஆனால், இந்த சாதனம் எப்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. அதற்கு மாறாக, அதன் சிறப்பு அம்சங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

unknown node

ஒன்பிளஸ் ஏஸ் 3 ப்ரோவானது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் ஏஸ் 2 ப்ரோவின் அப்டேட் வெர்ஷனாக இருக்கும் என்று கூறப்படுகிறது. கவனிக்க கூடிய விஷயம் என்னெவன்றால், ஒன்பிளஸ் ஏஸ் 2 ப்ரோ சீனாவில் மட்டும் தான் அறிமுகம் செய்யப்பட்டது.ஆனால், இந்தியா உட்பட பிற சந்தைகளுக்கு இந்த ஒன்பிளஸ் ஏஸ் 2 ப்ரோ வரவில்லை.

இப்பொது, அதே சீரீஸின் கீழ் அறிமுகமாகும் ஒன்பிளஸ் ஏஸ் 3 ப்ரோ மாடலும் இந்தியாவில் வெளியாகுமா என்று தெரியவில்லை. காரணம் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி ஒன்பிளஸ் 12 மற்றும் ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகமாகியது குறிப்பிடத்தக்கது.

unknown node

ஒன்பிளஸ் ஏஸ் 3 ப்ரோ சிறப்பம்சங்கள் :

6.78 இன்ச் BOE 8T LTPO AMOLED டிஸ்ப்ளே உடன் வருகிறது. இது1.6K ரெசல்யூஷனை ஆதரிக்கும் என்று கூறப்படுகிறது. இது 120Hz வரை புதுப்பிக்க முடியும்.

16MP மெகாபிக்சல் செல்ஃபி கேமராவும், 50MP மெகாபிக்சல் பிரதான கேமராவுடன் 8MP மெகாபிக்சல் கேமரா மற்றும் 2MP மெகாபிக்சல் கேமரா ஆகியவற்றைக் கொண்ட மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும்.

24GB LPDDR5x ரேம் மற்றும்1TB ஸ்டோரேஜ் உடன் கிடைக்கும்.

டிப்ஸ்டர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 3 சிப்பை அடிப்படை செயலியாக கொண்டிருக்கும். இது அதன் முன்னோடியை விட 20 சதவீதம் அதிக செயல்திறன் கொண்டதாகவும், அதிக சக்தி வாய்ந்தது என்றும் கூறப்படுகிறது.

OnePlus Ace 3 Pro ஆனது 100W வயர்டு சார்ஜிங் ஆதரவுடன் டூயல்-செல் 6100mAh பேட்டரி உடன் வருகிறது. இது 2 நாள் வரை பேட்டரி ஆயுளை கொண்டிருக்கும்.

இந்த சிறப்பம்சங்கள் குறித்த தகவல்கள் அனைத்தும் அதிகாரப்பூர்வமாக வரும் வரை காத்திருக்க வேண்டும்.