ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினர் தாக்குதலில் 28 தலிபான் தீவிரவாதிகள் கொலை!

ஆப்கானிஸ்தானில் நேற்று இரவு பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் தலிபான் பயங்கரவாதிகள் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் கடந்த 19 ஆண்டுகளாக தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அரசு படைக்கும் இடையே மிக பயங்கரமான உள்நாட்டுப்போர் அடிக்கடி ஏற்பட்டு கொண்டிருக்கிறது. இந்த உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா முயற்சி மேற்கொண்டு வருகிறது. கடினமான ஒன்றாக இருந்தாலும் அமெரிக்காவின் முயற்சியால் தற்பொழுது அதன் பயனாக தலிபான்கள் மற்றும் ஆப்கானிஸ்தான் அரசு இடையே கத்தார் நாட்டில் வைத்து அமைதி முறையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
அமைதியான பேச்சு வார்த்தை ஒரு பறம் நடைபெற்று வந்தாலும் ஆப்கானிஸ்தானில் தங்கள் தாக்குதலை தலிபான் பயங்கரவாதிகள் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தலிபான் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளாகிய ராணுவத்தினரும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்றிரவு ஆப்கானிஸ்தானின் மாகாணத்தின் 5 மாவட்டங்களில் பாதுகாப்பு ராணுவத்தினர் நேற்று அதிரடி தேடுதல் வேட்டையை நடத்தியுள்ளனர். இந்த தேடுதல் வேட்டையில் தலிபான் பயங்கரவாதிகள் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
உச்சநீதிமன்ற அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய குடியரசுத் தலைவர்.., முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.!
May 15, 2025
இந்தியா பயப்படாது…அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு பதிலடி தான்” அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!
May 15, 2025