பாலிவுட் சூப்பர் ஸ்டாருடன் இணைந்துள்ள அட்லி.!

அட்லி அவர்கள் அடுத்ததாக ஷாருக்கானை வைத்து இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரபல இயக்குநரான அட்லி இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் பிகில். விஜய் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் 300கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது . ஆனால் இவர் தயாரிப்பாளருக்கு அதிக செலவு வைக்கும் இயக்குனராகவும், வேறு படங்களில் இருந்து காப்பி அடித்து இயக்குபவர் என்றும் கோலிவுட் வட்டாரங்களில் கிசுக்கிசுக்கப்படுவதால் வாய்ப்பை யாரும் கொடுக்க முன்வருவதில்லை . மேலும் தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் பல படங்களையும் தயாரித்து வருகிறார்.
சமீபத்தில் அட்லி அடுத்ததாக பாலிவுட்டில் களமிறங்கி ஷாருக்கான் அவர்களை வைத்து இயக்க உள்ளதாகவும், அதற்கு சாங்கி என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது .அதனையடுத்து ஷாருக்கான் ராஜ்குமார் ஹிரானி இயக்கும் ஒரு படத்தில் கமிட்டாகியதால் அட்லி படத்தில் இருந்து விலகியதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது ஷாருக்கான் கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் ஒரே நேரத்தில் இரண்டு படங்களிலும் நடிப்பார் என்று கூறப்படுகிறது. இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஷாருக்கான் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025