வலிமை படத்திற்கான ரிலீஸ் தேதி….? வெளியான அதிரடி தகவல்..!!

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படம் ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி வெளியீட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்.
நடிகர் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். அம்மா-மகன் என்ற பாசப் பிணைப்பில் உருவாகும் இந்த படத்தில் அஜித் அவர்கள் ஐஏஎஸ் என்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது . இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தற்போது வலிமை படத்தின் டப்பிங் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாகவும், கிளைமாக்ஸ் காட்சிக்காக விரைவில் தல அஜித் வெளிநாடு செல்ல உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது.மேலும் படத்தின் மோஷன் போஸ்டர் ரெடியாகி விட்டதாகவும் கூறப்பட்டது.
இது ஒருபுறம் இருக்க மறுபுறம் டைட்டிலை தவிர இதுவரை வலிமை படத்திலிருந்து எந்த அப்டேட்டும் வெளியாகாத காரணத்தால் தல ரசிகர்கள் பல பிரபலங்களிடமும், அரசியல் பிரமுகர்களிடமும் அப்டேட் எப்போது என்று கேட்டு வருகின்றனர். இதனை அஜித் கண்டித்து அறிக்கையும் வெளியிட்டிருந்தார்.எனவே அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட்க்காக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் நேற்று வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகின்ற மே 1 ஆம் தேதி அஜித் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிப்பு வெளியானது.
இந்த நிலையில் இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்திற்கான ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது. ஆம், வலிமை படம் கண்டிப்பாக வருகின்ற ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி வெளியீட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்டுகிறது. இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
‘நிறைபுத்தரிசி’ பூஜை…சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு!
July 29, 2025
ஆபரேஷன் சிந்தூர் விவாதம் : இன்று மாலை பிரதமர் மோடி உரை?
July 29, 2025