குருவாயூர் கோவிலில் நடிகர் அஜித் சாமி தரிசனம்.! வைரலாகும் புகைப்படங்கள்.!

நடிகர் அஜித்குமார் வலிமை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ஹெச்.வினோத் இயக்கத்தில் தனது 61-வது படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தையும் தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கிறார்.
இந்த படம் மணி ஹெய்ஸ்ட் சாயலில் உருவாகவுள்ளது. இதனால் படத்தில் அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். படத்தில் நடிப்பதற்காக 25-கிலோ உடல் எடையை குறைத்துள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு வருகின்ற ஏப்ரல் 2-வது வாரம் பூஜையுடன் தொடங்கப்படும் என கூறப்படுகிறது.
இதற்கிடையில், அஜித் குமார் கேரளாவில் உள்ள குருவாயூர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அப்போது அங்கு எடுக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் தற்போது சமூக வளைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
புகைப்படத்தில் அஜித் ak 61 படத்திற்கான லுக்கில் இருப்பதால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!
May 13, 2025
அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
May 13, 2025
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025