யாருடன் நடிக்க ஆசை…? நடிகை வாணி போஜன் பதில்..!!

எல்லா கதாநாயகர்களுடன் நடிக்க வேண்டும் அதுதான் எனது ஆசை என்று நடிகை வாணி போஜன் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
நடிகை வாணி போஜன் தெய்வமகள் என்ற சீரியல் மூலம் அறிமுகமானவர். அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஓர் இரவு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து ஓ மை கடவுளே, லாக்கப் போன்ற படங்களில் நடித்தார். தற்போது இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் சீயான் 60 படத்திலும், பரத்துக்கு ஜோடியாக ஒரு புதிய திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களுக்கான படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த இரண்டு திரைப்படங்களின் அப்டேட்டுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகை வாணி போஜனிடம் உங்களுக்கு யாருடன் நடிக்க ஆசை என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த நடிகை வாணி போஜன் கூறியது ” அப்படியெல்லாம் ஒருவரை கூறமுடியாது எல்லா கதாநாயகர்களுடன் நடிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025