மாமல்லபுரம் அருகே நடந்த விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயம். அவரது தோழி பவணி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை யாஷிகா ஆனந்த். தற்போது நடிகர் எஸ்.ஜே சூர்யாவிற்கு ஜோடியாக புதிய திரைப்படத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில், நடிகை யாஷிகா ஆனந்த் நேற்று நள்ளிரவு தனது காரில் தனது நண்பர்களுடன் பார்ட்டிக்கு சென்றுள்ளார். பார்ட்டிக்கு சென்று திரும்பியபோது, கார் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையோரத்தில் இருந்த தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், படுகாயமடைந்த யாஷிகா ஆனந்த் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் காரில் பயணித்த அவரது தோழி வள்ளிச்செட்டி பவணி என்பவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். மேலும் இரண்டு ஆண் நண்பர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தகவலறிந்த மாமல்லபுரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வள்ளிச்செட்டி பவணி உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…