பிரபாஸ் நடிக்கவிருக்கும் ஆதிபுருஷ் படத்தில் ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகுபலி திரைப்படத்தின் மூலம் பிரபலமான பிரபாஸ் ஊரடங்கு முடிந்ததும் ராதே ஷியாம் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இதில் பிரபாஸ்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். அதனையடுத்து நாக் அர்ஜுன் இயக்கத்தில் 400 கோடி பட்ஜெட்டில் பிரமாண்ட படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். அதாவது அந்த பிரபாஸ் 21 ஒரு கற்பனையான மூன்றாம் உலகப் போரை அடிப்படையாக கொண்டது என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் பிரபாஸ்க்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கவுள்ளார்.
சமீபத்தில் அவரது 22வது படத்தினை குறித்த தகவல்கள் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ருடன் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருந்தது. ஓம் ராவத் இயக்கத்தில் “AdiPurush” என்று பெயரிடப்பட்டுள்ள்ள இந்த படத்தை பூஷன் குமாரின் டி. சீரிஸ் தயாரிக்கிறது. இந்தப் படம் தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் உருவாக்கப்படுவதாகும், தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் மற்ற வெளிநாட்டு மொழிகளில் டப் செய்யப்பட்டு ஒரே சமயத்தில் வெளியாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 3டி ல் உருவாகும் இந்த படம் கடவுள் விஷ்ணுவின் முதல் அவதாரத்தை மையமாக கொண்டு ராமாயண காவியத்தினை தழுவி எடுக்கப்படும் படம் என்று கூறப்படுகிறது. இதில் பிரபாஸ் ராமனாக நடிப்பதாக கூறப்படுகிறது. அப்போது சீதையாக நடிப்பது யார் என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்த நிலையில் முக்கிய கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…