பிரபல குழந்தை நட்சத்திரத்தின் உயிரை காவு வாங்கிய டெங்கு காய்ச்சல்!

தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் மழை காலம் துவங்கியுள்ளதால், கொசு தொல்லை அதிகரித்துள்ளது. இதனால பல இடங்களில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு சார்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தாலும், டெங்கு காய்ச்சலால் பலியாகுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து தான் வருகிறது.
இந்நிலையில், பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா போல நடித்து புகழ்பெற்ற குழந்தை நட்சத்திரம் கோகுல் சாய்கிருஷ்ணா. இவர் கடந்த ஒரு வார காலமாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 18-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவர் மக்களால் ஜூனியர் பாலகிருஷ்னா என்று அழைக்கப்படுகிறார். இவரது மரணத்திற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிற நிலையில், பாலகிருஷ்ணா தனது ட்வீட்டர் பக்கத்தில் ‘ சாய் கிருஷ்ணாவின் எதிர்பாராத மரணம் குறித்த தகவல், தனது இதயத்தை நொறுக்கிவிட்டதாகவும், தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை அவருடைய குடும்பத்தினருக்கு தெரிவித்துக் கொள்வதாகவும் பதிவிட்டுள்ளார்.