சீனாவுடன் தூதரக உறவு : சாலமன் தீவு நாடாளுமன்றத்திற்கு தீ வைத்த பொதுமக்கள்….!

Default Image

சாலமன் தீவு பிரதமர் சீனாவுடன் தூதரக உறவை ஏற்படுத்தியதால்  பொதுமக்கள் நாடாளுமன்றத்திற்கு தீ வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென் பசுபிக் பெருங்கடலில் உள்ள நூற்றுக்கணக்கான தீவுகளை கொண்ட நாடு தான் சாலமன். இந்த நாட்டில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் மனசே சோகவரே என்பவர் பிரதமராக இருந்து வருகிறார். இந்நிலையில் இவர் அண்மையில் தைவான் உடனான தூதரக உறவை துண்டித்து விட்டு, சீனாவுடன் தூதரக உறவை ஏற்படுத்தி உள்ளார். இதற்கு அந்நாட்டு மக்கள் பெரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் அரசின் இந்த முடிவை ஏற்க மறுத்த, நாட்டின் பல்வேறு மாகாண அரசுகள் பிரதமரை பதவி விலக வேண்டும் எனவும் வலியுறுத்தி வந்தனர். இது தொடர்பாக போராட்டம் வலுத்த நிலையில், தலைநகர் ஹோனியாராவில் உள்ள நாடாளுமன்றம் முன்பு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.

அப்போது போலீசார் அவர்களை விரட்டி அடிக்க முயன்றதால் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. இந்த மோதல் தற்பொழுது வன்முறையாக மாறியுள்ளது. இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் நாடாளுமன்ற கட்டிடத்திற்கும், அதன் அருகில் உள்ள ஒரு காவல் நிலையத்துக்கும் தீ வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 07052025
Operation Sindoor
Pakistan PM Shehbaz sharif say about Operation Sindoor
Operation Sindoor
MIvsGT - ipl
MK stalin
MI vs GT