அட்லீ & ஷாருக்கான் இணையும் படத்திற்கான சூப்பர் அப்டேட்.!!

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கவுள்ள படத்திற்கான படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் படங்களின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் அட்லீ அடுத்ததாக பாலிவுட் திரையுலகின் பிரபலமான நடிகரான ஷாருக்கானை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாக கடத்த ஆண்டு அறிவித்திருந்தார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு நீண்ட நாட்கள் ஆகியும் தொடங்கப்படவில்லை என்பதால் படம் கைவிட்டு போனது என்று ரசிகர்கள் கூறிவந்தனர்.
இதனை தொடர்ந்து தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் இந்த படத்திற்கான படப்பிடிப்பு வருகின்ற ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளதாகவும் அதற்கான முன் பணிகள் இன்றும் முதல் தொடங்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் தற்போது நடிகர் ஷாருக்கான் இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பதானி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விரைவில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு முடிந்து விடும் என்று கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
“நடந்து முடிந்த குரூப் – 4 தேர்வை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்த வேண்டும்” – தவெக பொதுச்செயலாளர்.!
July 17, 2025
எரிபொருள் சப்ளை ஸ்விட்சுகளை கேப்டன் ஆஃப் செய்தாரா? – இந்திய விமானிகள் சங்கம் கண்டனம்.!
July 17, 2025