மாற்றமின்றி விற்பனையாகும் முட்டை விலை..!

Today in the Namakkal region the farm purchase price of eggs is being sold at 4.40 rupees, unchanged from the price on the 30th.

இன்று நாமக்கல் மண்டலத்தில் முட்டையின் பண்ணை கொள்முதல் விலை கடந்த 30ம் தேதி விற்பனை செய்யப்பட்ட விலையிலிருந்து மாற்றம் செய்யப்படாமல் 4.40 காசுகளாகவே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்ட துவக்கத்தில் அதிகளவில் அடி வாங்கிய வியாபாரம் என்றால் அது முட்டை வியாபாரம் என்று கூறலாம். 1 ரூபாய்க்கும் கீழ் குறைந்து மிகவும் அதிகளவில் சீப்பாக குப்பைகளிலும் கொட்டப்பட்டது.

இதற்கு பின் வேகமாக முட்டை விலை உயர்ந்து மற்றும் குறைந்து வருகிறது. இந்த நிலையில் நாமக்கல் மண்டலத்தில் தேசிய முட்டை ஒருங்கிணைப்ப உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது, கூட்டத்தில் முட்டையின் விலையை உயர்த்த முடிவு செய்தனர்.

அதன் படி இன்று நாமக்கல் மண்டலத்தில் முட்டையின் பண்ணை கொள்முதல் விலை கடந்த 30ம் தேதி விற்பனை செய்யப்பட்ட விலையிலிருந்து மாற்றம் செய்யப்படாமல் 4.40 காசுகளாகவே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.