முட்டை விலை 15 காசுகள் உயர்வு..!

Today the farm purchase of eggs in Namakkal region is being sold for 4.15 kas.

இன்று நாமக்கல் மண்டலத்தில் முட்டையின் பண்ணை கொள்முதல் 4.15 காசுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்ட துவக்கத்தில் அதிகளவில் அடி வாங்கிய வியாபாரம் என்றால் அது முட்டை வியாபாரம் என்று கூறலாம். 1 ரூபாய்க்கும் கீழ் குறைந்து மிகவும் அதிகளவில் சீப்பாக குப்பைகளிலும் கொட்டப்பட்டது.

இதற்கு பின் வேகமாக முட்டை விலை உயர்ந்து மற்றும் குறைந்து வருகிறது. இந்த நிலையில் நாமக்கல் மண்டலத்தில் தேசிய முட்டை ஒருங்கிணைப்ப உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது, கூட்டத்தில் முட்டையின் விலையை அதிகரிக்க முடிவு செய்தனர்.

அதன் படி, இன்று நாமக்கல் மண்டலத்தில் முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 15 காசுகள் உயர்ந்து 4.15 காசுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதைபோல் சென்னையில் முட்டை விலை 4.20 காசுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.