சென்னையில் ஆபாரணதங்கத்தின் விலை ரூ.256 அதிகரித்துள்ளது.
பொதுவாக தங்கம் விலையில் ஏற்றம், இறக்கம் காணப்படுவது வழக்கம் தான். தங்கத்தின் விலையில் ஏற்படும் மாற்றங்களை மிகவும் உற்றுநோக்கி கவனிப்பவர்கள் பெண்கள் தான். ஏனென்றால், பெண்கள் தங்களது முதலீட்+டை அதிகமாக தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு.
இந்நிலையில், இன்று தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபாரணதங்கத்தின் விலை ரூ.256 அதிகரித்துள்ளது. அதன்படி ஒரு கிராமுக்கு ரூ.32 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.4,566-க்கும், ஒரு சவரன் ரூ.36,528-க்கும் விற்பனையாகிறது. மேலும் வெள்ளி ஒரு கிராமுக்கு 40 காசுகள் குறைந்து ரூ.72.30-க்கு விற்பனையாகிறது.