மீண்டும் ஜோடி சேரும் சூர்யா-ஜோதிகா.! இயக்குனர் இவர் தான்.!

ஹலீதா ஷமீம் இயக்கத்தில் உருவாகும் படத்தின் மூலம் மீண்டும் சூர்யா-ஜோதிகா இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2009-ல் வெளியான “பூவெல்லாம் கேடடுப்பார்” மூலம் காதலில் விழுந்த சூர்யா மற்றும் ஜோதிகா தம்பதியினர் இன்றும் ரசிகர்களின் பேவரட் தம்பதிகளில் ஒருவராக திகழ்ந்து வருகின்றனர் . அதனையடுத்து உயிரிலே கலந்தது ,காக்க காக்க ,மாயாவி , பேரழகன் உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்த இவர்கள் கடைசியாக சில்லனு ஒரு காதல் படத்தில் 2006ல் நடித்தனர் . அதனையடுத்து திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து விலகி குடும்பத்தை நோக்கும் பொறுப்பை ஏற்றார் ஜோதிகா.
அதனையடுத்து கடந்த 2016-ஆம் ஆண்டு ’36 வயதினிலே” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்த ஜோதிகா , தொடர்ந்து பெண் கதாபாத்திரத்தை மையமாக கொண்டு பல மெகா ஹிட் படங்களை ரசிகர்களுக்கு அளித்தார் .இந்த ஜோடியை மீண்டும் திரையில் ஒன்றாக காண ரசிகர்கள் இன்றும் ஆசைப்படுகின்றனர் .அதனை நிறைவேற்றும் வகையில் சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதனை ஹலீதா ஷமீம் இயக்க உள்ளதாக சமீபத்தில் அளித்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார் .இவர் பூவரசம் பீப்பீ, சில்லுக்கருப்பட்டி போன்ற படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.மீண்டும் சூர்யா-ஜோதிகா இணைந்து நடிக்கவுள்ள படத்தின் கதை எழுதும் பணிகள் நடந்து வருவதாகவும், விரைவில் ஸ்கிரிப்ட் எழுதும் பணிகளை முடித்து விட்டு விரைவில் படத்தினை குறித்த அறிவிப்பு வெளிவரும் என்று ஹலீத் ஷமீம் தெரிவித்துள்ளார்.அதற்கான ஒப்பந்தத்தை சூர்யா மற்றும் ஜோதிகாவிடமிருந்து பெற்று கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.இது ரசிகர்களைடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
உச்சநீதிமன்ற அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய குடியரசுத் தலைவர்.., முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.!
May 15, 2025
இந்தியா பயப்படாது…அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு பதிலடி தான்” அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!
May 15, 2025