வேதாவாக மிரட்ட வருகிறார் ஹிருத்திக் ரோஷன்..!!

Default Image

விக்ரம் வேதா திரைப்படம் இந்தியில் ரீமேக் படத்தில் வேதா கதாபாத்திரத்தில் நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடிக்கவுள்ளார். 

 புஷ்கர்- காயத்ரி ஆகியோர் இயக்கத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் விக்ரம் வேதா. சிறந்த கேங் ஸ்டார் படமாக உருவாகியிருந்த இந்த திரைப்படத்தில் மாதவன் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் நடித்து இருந்தனர். சாம் சி.எஸ். இசையமைத்திருந்தார். மேலும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலக்ஷ்மி சரத்குமார், கதிர், விவேக் பிரசன்னா போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடித்த இந்த திரைப்படம் நல்ல வசூல் சாதனையையும் படைத்தது.

இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆகவுள்ளதாக தகவ்கள் வெளியாகியுள்ளது. முன்பே இந்த தகவல் வெளியாகியிருந்த நிலையில், தற்போது இது உறுதியாகிவிட்டதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றார்கள். இந்த இந்தி ரீமேக்கில் விஜய் சேதுபதி நடித்த வேதா கதாபாத்திரத்தில் நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  மேலும் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

eps - mk stalin
DMK - Ajithkumar
Ajith Kumar TN Govt
elon musk vs Trump
Ajith Kumar Case - Siva Gangai