எனக்கு தமிழ் தெரியாதா..? தமிழ் என் தாய்மொழி என ட்விட் செய்து பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்..!

— Mithali Raj (@M_Raj03) October 15, 2019

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூரில் 1982-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி மிதாலிராஜ் பிறந்தார். இவர் தந்தை துரைராஜ் நாகப்பட்டினத்தை சேர்ந்தவர். ஆனால் விமானப்படையில் வேலை செய்த துரைராஜ் பல இடங்களில் வேலை செய்யச் சென்றதால் செகந்திராபாத்தில் பணியாற்றினார்.இதனால் அங்கேயே மிதாலிராஜ் தனது கல்லூரிப் படிப்பையும் , பள்ளிப் படிப்பை முடித்தார். இதைத்தொடர்ந்து 1999-ம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் முதல் முறையாக மிதாலிராஜ் இந்திய அணிக்காக களம் இறங்கினார்.முதல் போட்டியில் மிதாலிராஜ் 114 ரன்கள் குவித்தார். மிதாலி ராஜ் இந்திய அணிக்காக 10 டெஸ்ட் போட்டி , 206 ஒருநாள் போட்டி , 89 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். மேலும் 20 ஆண்டுகளாக சர்வதேச போட்டியில் விளையாடிய வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார்.

unknown node