பிறந்தநாள் கொண்டாட்டங்களை முடித்துவிட்டு மீண்டும் பிஸியான உலகநாயகன்! இந்தியன் 2 அப்டேட்!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் அடுத்து தயாராகி வரும் திரைப்படம் இந்தியன் 2. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. உலகநாயகன் கமல்ஹாசன் ஹீரோவாக நடித்து வருகிறது.
இப்படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக வடமாநிலங்களில் நடந்து வந்தது. உலகநாயகன் கமல்ஹாசன் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்க்காக சென்னையில் இருந்தார். தற்போது மீண்டும் ராஜஸ்தான் கிளம்பியுள்ளார் உலகநாயகன். அங்கு இன்னும் 5 நாள் ஷூட்டிங் இருக்கிறதாம். அது முடிந்து மீண்டும் சென்னை வந்து தனது அரசியல் பணிகளை கண்காணிக்க உள்ளார்.