INDvsSA:தொடக்க வீரர் மயங்க் அகர்வால் அரைசதம்..!

இன்று தென் ஆப்பிரிக்கா இந்தியா இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில் நடைபெற்று வருகிறது.இப்போட்டியில் இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரராக

இன்று தென் ஆப்பிரிக்கா இந்தியா இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில் நடைபெற்று வருகிறது.இப்போட்டியில் இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரராக மயங்க் அகர்வால், ரோகித் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே பொறுமையாக விளையாடிய ரோகித் 14 ரன்களுடன் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.பின்னர் புஜாரா ,  மயங்க் அகர்வால் இருவரும் விளையாடி வந்தனர். இந்நிலையில் தொடக்க வீரரான மயங்க் அகர்வால் 112 பந்தில் அரைசதம் அடித்தார். அதில் 10 பவுண்டரி அடங்கும். இந்திய அணி 43 ஓவர் முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 130  ரன்கள் அடித்து உள்ளனர். தற்போது களத்தில் மயங்க் அகர்வால் 70 , புஜாரா 36 ரன்களுடன் விளையாடி வருகின்றன.