திருமணம் திருப்பம் தரும் என்பது உண்மைதானோ என்று பாடலாசிரியர் சினேகன் ட்வீட் செய்துள்ளார்.
பாடலாசிரியரும், மக்கள்நீதி மய்யம் கட்சியின் இளைஞரணி செயலாளருமான சினேகனும் நடிகை கன்னிகா ரவியும் கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்தனர். இதனை தொடர்ந்து இருவீட்டாரின் சம்மதத்துடன் கடந்த ஜூலை – 29 திருமணம் செய்துகொண்டனர்.
இந்த நிலையில், திருமணம் முடிந்த மறுநாளே சினேகனுக்கு இரண்டு படங்களில் நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது. கௌதம் கார்த்தி நடித்து வரும் “ஆனந்தம் விளையாடும் வீடு” என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும் இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகும் படத்திலும் சினேகன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இது குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் சினேகன் ” திருமணம் முடிந்த மறுநாளே சிவகாசியில் நந்தா பெரியசாமி இயக்கத்தில் “ஆனந்தம் விளையாடும் வீடு” என்ற படத்தில் நடித்ததும். அதைத்தொடர்ந்து இன்று தூத்துக்குடியில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிப்பதும் மகிழ்ச்சியாக இருக்கிறது. திருமணம் திருப்பம் தரும் என்பது உண்மைதானோ” என்று பதிவிட்டுள்ளார்.
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…