இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் மாஸ்டர் பவானி..?

விஜய் சேதுபதி அடுத்ததாக இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் நடிப்பதாகவும் அந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் நடித்த கடைசி விவசாயி, மாமனிதன் துக்ளக் தர்பார் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்த படங்களை தொடர்ந்து கொரோனா குமார், மும்பை கார், இடம் பொருள் ஏவல், காத்து வாக்குல ரெண்டு காதல் போன்ற பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது இவரது நடிப்பில் கடைசியாக வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது நடிகர் விஜய் சேதுபதி இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் ஒரு புதிய தமிழ் திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பதாகவும் இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் சமூக வலைத்தளத்தில் செய்திகள் வெளியாகி வைரலாகி வருகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025