நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் திரைப்படம் தீபாவளியன்று சன் டிவியில் ஒளிபரப்பாகும் என சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளதாம்.
சூரரை போற்று திரைப்படத்தில் இணைய வெளியீட்டு உரிமையை அமேசான் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அக்டோபர் 30-ஆம் தேதி படம் OTTயில் ரிலீசாக உள்ளது. அதே போல இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி நிறுவனம் பெற்றுள்ளது. சன் டிவி முதலில் சூரரைபொற்று திரைப்படத்தை தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டு இருந்தது. ஆனால், அக்டோபர் 30-ஆம் தேதி இணையத்தில் வெளியாகும் திரைப்படம், நவம்பர் மாத இடையில் வரும் தீபாவளியில் திரையிடப்பட்டால் இணைய வெளியீடு பாதிக்கப்படும் என அமேசான் தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்துள்ளதாக தெரிகிறது.
ஆதலால், தீபாவளிக்கு சூரரைப்போற்று திரைப்படத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யும் முடிவை சன் டிவி நிறுவனம் பரிசீலித்து வருவதாக தெரிகிறது. அதே நேரத்தில் சன் டிவியில் தீபாவளி அன்று வேறொரு பெரிய திரையில் ரிலீசாகாத புதிய படத்தை திரையிட முடிவு செய்துள்ளதாம்.
அதன்படி, நயன்தாரா நடிப்பில் ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள மூக்குத்தி அம்மன் திரைப்படத்தை தீபாவளிக்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்ப சன் டிவி திட்டமிட்டுள்ளதாம். அதனால், தற்போது அமேசான் அல்லது சன் நெக்ஸ்ட் OTT தளத்தில் மூக்குத்தி அம்மன் திரைப்படம் விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. அதற்கடுத்ததாக தீபாவளியன்று மூக்குத்தி அம்மன் திரைப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் எனவும் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…