நியூசிலாந்து பிரதமர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்..!

நியூசிலாந்து நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளார்.
உலக நாடுகள் கொரோனாவின் இரண்டாம் அலையால் பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ளது. அதனால் உலக நாடுகள் அனைத்தும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். நியூசிலாந்து நாட்டில் அமெரிக்காவில் தயாரிக்கும் பைசர் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டில் உள்ளது.
தற்போது நியூசிலாந்து நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் நேற்று கொரோனா தடுப்பூசியின் முதல் தவணையை செலுத்திக்கொண்டுள்ளார். மேலும், மக்கள் அனைவரையும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருக்கிறார். இதுவரை அந்நாட்டில் 10 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
” இது இந்தியாவின் போர் நடவடிக்கை! தக்க பதிலடி கொடுக்கப்படும்!” பாகிஸ்தான் கடும் கண்டனம்!
May 7, 2025
குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!
May 7, 2025