விருமன் படத்தில் இணைந்த பருத்திவீரன் பட நடிகர்.?

விருமன் படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான “கொம்பன்” படத்துக்குப் பிறகு நடிகர் கார்த்தி – இயக்குனர் முத்தையா கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்துக்கு “விருமன்” என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
இப்படத்தில் கார்த்தியுடன் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சூரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். கார்த்திக்கு ஜோடியாக ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் நடிக்கிறார்.
இப்படத்தை 2டி எண்டெர்டெய்ன் நிறுவனம் சார்பில் சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து தயாரிக்கின்றனர். இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் இந்த படத்தில் நடிகர் கஞ்சா கருப்பு நடிக்கவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இதற்குமுன்பு கஞ்சா கருப்பு கார்த்தி நடிப்பில் வெளியான பருத்திவீரன் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025