அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடருக்கான ஏலம் சமீபத்தில் நடைபெற்றது.
ஐபிஎல் ஏலத்தில் பெரியசாமி இடம்பெறுவார் என எதிர்பார்த்திருந்த நிலையில் அவரை ஏலத்தில் எடுக்கவில்லை.
தற்போது ஆண்டு தோறும் தமிழகத்தில் டிஎன்பிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் ஐபிஎல் தொடரில் சிலர் இடம்பெற்றுள்ளன இந்நிலையில் இந்த வருடம் நடைபெற்ற டிஎன்பிஎல் தொடரில் வித்தியாசமான பௌலிங் , நேர்த்தியாக பந்து வீச்சு என அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் பெரியசாமி.
பெரியசாமி சென்னை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்காக விளையாடினார். இவரது வலது கண்ணில் பார்வைக் குறைபாடு இருந்தும் டிஎன்பிஎல் தொடரில் அணிக்காக சிறப்பாக விளையாடினார். இறுதிப் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதும் , தொடர் ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.
unknown nodeஅனைவரின் கவனத்தையும் ஈர்த்த பெரியசாமி அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடருக்கான ஏலம் சமீபத்தில் நடைபெற்றது. இந்த ஐபிஎல் ஏலத்தில் பெரியசாமி இடம்பெறுவார் என பலர் எதிர்பார்த்திருந்த நிலையில் அவரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.
இதனால் ஏமாற்றமடைந்த பெரியசாமி சற்றும் மனம் தளராமல் விசைத்தறி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.மேலும் தொடர் பயிற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.