12 பாடல்கள் ஒரே படத்துக்காக! பொன்னியின் செல்வன் புது அப்டேட்!

செக்கச்சிவந்த வானம் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம், தனது கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தை இயக்க உள்ளார். இதற்கான கதையை விவாதத்தில் ஒரு வருடத்திற்கும் மேலாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது இப்படம் பற்றிய மேலும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
இப்படம் சோழர் காலத்து கதைகளம் என்பதால், இப்படத்தில் 12 பாடல்களை வைரமுத்து எழுத உள்ளாராம். அந்த பாடல்களில் அக்கால வரிகளை இக்காலத்திற்கு ஏற்றவாறு எழுத உள்ளாராம். இப்படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைக்க உள்ளார். ரவிவர்மன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய உள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது. இப்படத்திற்கான சூட்டிங் இந்த வருடம் டிசம்பரில் ஆரம்பிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும்” – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.!
July 7, 2025
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் : 58 ஆண்டுகள்.., வரலாற்று வெற்றியைப் பதிவு செய்த இந்தியா.!
July 7, 2025