ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!

ஜப்பான் நாட்டில் திடீரென்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவாகியுள்ளது.
ஜப்பான் நாட்டில் ஹோன்சு நகரில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கிழக்கு கடலோரப்பகுதியில் உருவான இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டதாக அமெரிக்க வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
மேலும், ஜப்பானின் தகஹாகி பகுதியில் நேற்று முன்தினம் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தகஹாகி பகுதியில் கிழக்கு-தென்கிழக்கில் 125 கி.மீ தொலைவில் இது ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025