இரண்டாவது டெஸ்ட் : ரசிகர்களை மிரள வைத்த ரோஹித்..!வைரல் வீடியோ ..!

Wonderful Catch in One Hand...#RohitSharma #PinkBallTest#INDvsBAN pic.twitter.com/cPF7SbdXLy

இந்தியா, பங்களாதேஷ் அணிகளுக்கிடையே நேற்று பகலிரவு டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது.இப்போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.முதலில் இறங்கிய பங்களாதேஷ் அணி 30.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 106 எடுத்தனர். இந்திய அணி சார்பில் இஷாந்த் சர்மா 5 , உமேஷ் 3 , மற்றும் ஷமி 2 விக்கெட்டை வீழ்த்தினர்.இதை தொடர்ந்து இறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட்டை இழந்து 174 ரன்கள் எடுத்து 68 ரன்களுடன் முன்னிலையில் உள்ளனர்.களத்தில் கோலி 59 , ரஹானே 23 ரன்களுடன் உள்ளனர். பங்களாதேஷ் அணியில் எபாதத் இரண்டு விக்கெட்டை வீழ்த்தினார்.இப்போட்டியின் 11 வது ஓவரின் போது உமேஷ் யாதவ் வீசிய பந்து பங்களாதேஷ் கேப்டன் மோமினுல் ஹக் பேட்டின் விளிம்பில் பட்டு பந்து விராட் கோலியை நோக்கி விரைந்தது. அப்போது ரோஹித் ஷர்மா ஒரு கையால் கேப்டன் கோலிக்கு முன்னால் டைவ் செய்து கேட்சை பிடித்தார்.

unknown node