மீண்டும் சல்மான்கானை வைத்து படம் இயக்க உள்ள பிரபுதேவா! போக்கிரி பார்ட்-2!?

பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு ரசிகர்களைப் பெற்றவர் நடிகர் சல்மான் கான். இவரது நடிப்பில் அடுத்ததாக தபாங் 3 திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் 20ஆம் தேதி வெளியாக உள்ளது. இதற்கு முன்னர் வெளியான தபாங் 1&2 படங்கள் பெரிய வெற்றி பெற்றன.
தற்போது தபாங் 3ஆம் பாகத்தை பிரபுதேவா இயக்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து மீண்டும் சல்மான்கானை வைத்து ராதே எனும் திரைப்படத்தை எடுக்கவுள்ளார். இப்படம் சல்மான் கான் நடிப்பில் பிரபுதேவா இயக்கியிருந்த வாண்டட் (தமிழ் போக்கிரி) திரைப்படத்தின் அடுத்த பாகம் என கூறப்படுகிறது. இப்படம் அடுத்த வருட ரம்ஜானுக்கு வெளியாக உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
ரஷ்யாவிடம் எரிபொருள் வாங்கும் இந்தியா, சீனா மீது அமெரிக்கா 500% வரி? – செனட் மசோதாவுக்கு ஒப்புதல்.!
July 2, 2025
அஜித் சம்பவம் போல் மற்றொரு அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்.., இளைஞரை சரமாரியாக தாக்கிய போலீசார்.!
July 2, 2025