தீவிரவாதத்திற்கு எதிரான போரில் பங்கேற்க இந்தியா-பாகிஸ்தான் ஒப்புதல்.
துஷான்பேயில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) கூட்டத்தின் போது, உறுப்பு நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் சர்வதேச பயங்கரவாதம், தீவிரவாதம் மற்றும் பிரிவினைவாதத்திற்கு எதிரான கூட்டுப் போராட்டத்தில் ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதியளித்தனர். உறுப்பு நாடுகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மொயீத் யூசஃப் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தை நடத்திய தஜிகிஸ்தான் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், சர்வதேச பயங்கரவாதம், தீவிரவாதம், பிரிவினைவாதம் மற்றும் மத தீவிரவாதம் ஆகியவற்றின் அச்சுறுத்தல்களுக்கு எதிரான போராட்டத்தில் கூட்டாக பங்கேற்க இருநாட்டு ஆலோசகர்களும் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பிராந்திய பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பான ராட்ஸ், பிராந்திய பாதுகாப்பை உறுதி செய்வதிலும், நவீன உலகின் அச்சுறுத்தல்கள் மற்றும் சவால்களை எதிர்ப்பதில் எஸ்.சி.ஒ உறுப்பு நாடுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்க முடியும் என்று தெரிவித்துள்ளது.
மேலும் இந்த கூட்டத்தில், நம்பகமான தகவல் பாதுகாப்பை உறுதி செய்வதில் உறுப்பு நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பு, சைபர் கிரைமுக்கு எதிரான கூட்டுப் போராட்டம் மற்றும் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் பின்னணியில் உயிரியல் பாதுகாப்பு மற்றும் உணவுப் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் தஜிகிஸ்தான் தலைவர் எமோமலி ரஹ்மான் உரையாற்றினார். தோவல், யூசஃப் மட்டுமின்றி இந்த கூட்டத்தில் கஜகஸ்தானின் அஸ்ஸத் இசெக்கெசாவ், கிரிக் குடியரசின் மராட் இமான்குலோவ், ரஷ்யாவின் நிக்கோலாய் பத்ருஷேவ், தஜிகிஸ்தானின் சஸ்ருல்லோ முகமதுஸோடா, உஸ்பெகிஸ்தானின் போபு உஸ்மானோவ், ராட்ஸ் இயக்குநர் ஜுமாகோன் ஜியோஸோவ் ஆகியோர் பங்கேற்றனர். மேலும்,இந்த கூட்டத்தில் சீனாவின் பிரதிநிதி கலந்துகொள்ளவில்லை.
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…
கர்நாடகா : நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஒபுலாபுரம் சட்டவிரோத சுரங்க வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் மற்றும் 3 பேரை குற்றவாளிகள்…
சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-லிருந்து ரூ.20,000-ஆக உயர்த்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தநிலையில்,…
சென்னை : நகர்புறங்களில் பெரும்பாலும் கேன் குடிநீர் பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் குடிநீர் கேன் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும்…