ஷிகார் தவான் அதிரடி ! ஆஸ்திரேலியாவிற்கு 353 ரன்கள் இலக்காக வைத்த இந்திய அணி

இன்றைய போட்டியில் இந்திய அணியுடன் , ஆஸ்திரேலியா அணி மோதி வருகிறது. இப்போட்டி லண்டனில் உள்ள கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா ,ஷிகார் தவான் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே இருந்து இருவரும் நிதானமாக விளையாடி இருவரும் அரைசதத்தை நிறைவு செய்தனர்.அதனால் அணியின் எண்ணிக்கையை உயர்ந்தது.
அரைசதம் அடித்த சிறிது நேரத்தில் ரோஹித் சர்மா 57 ரன்னில் வெளியேறினார். பிறகு களமிறங்கிய விராட் கோலியும் , ஷிகார் தவான் அதிரடியாக விளையாடினர் . பின்னர் 37-வது ஓவரில் 117 ரன்கள் எடுத்து ஷிகார் தவான் அவுட் ஆனார்.
அடுத்ததாக களமிறங்கிய ஹர்திக் பாண்டியா தனது அதிரடி ஆட்டத்தால் 4 பவுண்டரி , 3 சிக்ஸர் எடுத்து 48 ரன்னிலும் , டோனி 27 ரன்னிலும் ,கோலி 82 ரன்னிலும் வெளியேறினார்.இறுதியாக இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 352 ரன்கள் குவித்தது.
ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சில் மார்கஸ் ஸ்டோனெனிஸ் 2 விக்கெட்டையும் ,நாதன் கொல்டர்-நைல், மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினார். 353 ரன்கள் இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்க உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
திருவள்ளூர் 8வயது சிறுமி பாலியல் வழக்கு: நெல்லூரில் வட மாநிலத்தை சேர்ந்த இருவர் கைது.!
July 19, 2025
”தமிழகத்தை 4 பேர் இத்தனை நாளாக ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றனர்” – இபிஎஸ் குற்றச்சாட்டு.!
July 19, 2025
மு.க.முத்து மறைவு – மநீம தலைவர் கமல்ஹாசன் இரங்கல்!
July 19, 2025