சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் கோப்ரா படத்தினை குறித்த முக்கிய அப்டேட் இன்று மாலை அறிவிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விக்ரம் தற்போது நடித்து வரும் திரைப்படம் கோப்ரா. இதில் விக்ரம் ஏழு வேடங்களில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தினை அஜய் ஞானமுத்து இயக்கி ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தில் விக்ரமுக்கு வில்லனாக பிரபல கிரிக்கெட் வீரரான இர்பான் பதான் நடிக்கிறார்.மேலும் வியாகாம் 18 மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
கொரோனா வைரஸ் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். கொரோனா தொற்று முடிவுக்கு வந்ததும் படப்பிடிப்புகள் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது. தற்போது ரசிகர்கள் காத்திருக்கும் ஒரே விஷயம் இந்த படத்தினை குறித்த அப்டேட் தான். இந்த நிலையில் தற்போது இந்த படத்தினை குறித்த முக்கிய அப்டேட் ஒன்றை இன்று மாலை படக்குழுவினர் வெளியிட உள்ளதாக சில தகவல்கள் கசிந்துள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் இயக்குனர் கோப்ரா படத்தின் டீசர் விரைவில் வெளிவரும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது. இதனால் ரசிகர்கள் பெரிதும் குஷியில் உள்ளனர்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…