“கொரோனா பரவலின் இரண்டாம் அலை தவிர்க்க முடியாதது!”- பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்

பிரிட்டனில் கொரோனா பரவுதலின் இரண்டாவது அலை தவிர்க்க முடியாதது என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், அதனை தடுக்க தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் நோக்கில் பல நாடுகள் தீவிரமடைந்துள்ளது. அதில் இந்தியா, ரஷ்யா, அமெரிக்க உட்பட நாடுகள், 3 ஆம் கட்ட பரிசோதனையில் இறங்கியுள்ளனர்.
கொரோனாவால் இதுவரை 3 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் 2.2 கோடிக்கும் மேற்பட்டோர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதில் 14 ஆம் இடத்தில் உள்ள பிரிட்டனில், 3.85 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 41 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளார்.
இந்தநிலையில், பிரிட்டனில் கொரோனா பரவுதலின் இரண்டாவது அலை தவிர்க்க முடியாதது எனவும், அதற்கான புதிய கட்டுப்படுகள் விதிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், பிரிட்டனில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தொடங்கியதாகவும், அது தவிர்க்க முடியாததாக உள்ளதாக தெரிவித்தார். மேலும் ஊரடங்கில் கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் விதிகளுக்கான அவசியம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025