இவங்க மட்டும் பாராட்டுனா எனக்கு விருது கிடைச்ச மாதிரி! ஹிப்ஹாப் ஆதி அதிரடி!

தல அஜித் மட்டும் இன்னும் எதுவும் சொல்லவில்லை. அவரும் பார்த்து என்னை பாராட்டி விட்டால் அது தான் எனக்கு கிடைக்கும் விருது.
நடிகர் ஹிப்ஹாப் ஆதி ஆம்பள திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அத்தனை தொடர்ந்து, இன்று நேற்று நாளை, தனி ஒருவன், அரண்மனை 2 போன்ற படங்களில் நடித்துள்ளார்.
தற்போது இவர் இயக்குனர் ராணா இயக்கத்தில், நான் சிரித்தால் என்ற படத்தில் நடித்துள்ளார். ஆதிக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா மேனன் நடித்துள்ளார். இப்படம் காதலர் தினத்தன்று வெளியாகவுள்ள நிலையில், இப்படம் குறித்து அவர் பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், ‘எனது நான் சிரித்தால் படத்தின் டீசரை பார்த்து, தளபதி விஜயின், ரஜினியும் பாராட்டி விட்டார்கள். ஆனால், தல அஜித் மட்டும் இன்னும் எதுவும் சொல்லவில்லை. அவரும் பார்த்து என்னை பாராட்டி விட்டால் அது தான் எனக்கு கிடைக்கும் விருது.’ எனக் கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025