புகழ்பெற்ற கவிஞர் மற்றும் சிறந்த ஓவியருமான கவிஞர் வாலி பிறந்த தினம் இன்று ….!

Default Image

புகழ்பெற்ற கவிஞரும், பாடலாசிரியரும் சிறந்த ஓவியருமான கவிஞர் வாலி பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

1901 ஆம் ஆண்டு அக்டோபர் 29 ஆம் தேதி திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் என்னும் பகுதியில் பிறந்தவர் தான் பிஎஸ் ரங்கராஜன். ஆனால் இவரை வாலி என்று அழைத்தால் தான் பலருக்கும் தெரியும். புகழ்பெற்ற கவிஞரும், பாடலாசிரியரும், ஓவியருமாகிய இவர் திரைப்படத்தில் எழுதிய முதல் பாடலின் மூலமாக 1958 ஆம் ஆண்டு அறிமுகமானார்.

அதன் பின்பு 1963 ஆம் ஆண்டு அவர் எழுதிய கற்பகம் எனும் திரைபட பாடலால் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திக் கொண்டார். ராமானுஜ காவியம், பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம் என பதினைந்து புத்தகங்களுக்கு மேல் எழுதியுள்ளார். மேலும் கலியுகக் கண்ணன், காரோட்டிக் கண்ணன், ஒரு செடியில் இரு மலர்கள் என சுமார் பதினைந்து திரைப்படங்களுக்கு மேல் திரைக்கதை வசனம் எழுதியுள்ளார்.

பொய்கால் குதிரை, சத்யா, பார்த்தாலே பரவசம், ஹே ராம் ஆகிய நான்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் பாரத விலாஸ், பத்மஸ்ரீ ஆகிய விருதுகளையும் பெற்றுள்ளார். திரையுலகில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய இவர் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். இவர் 2013 ஆம் ஆண்டு தனது 83 ஆவது வயதில் மறைந்தார். இவரது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

eps - mk stalin
DMK - Ajithkumar
Ajith Kumar TN Govt
elon musk vs Trump
Ajith Kumar Case - Siva Gangai