விஜய் சேதுபதி, விஜய்க்கு முத்தமிட்ட புகைப்படத்தை வெளியிடுமாறு ரசிகர்கள் வேண்டுகோள்!

விஜய் சேதுபதி, விஜய்க்கு முத்தமிட்ட புகைப்படத்தை வெளியிடுமாறு ரசிகர்கள் வேண்டுகோள்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர். விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில், நடிகர் விஜய் சேதுபதி, சாந்தனு போன்ற முக்கியமான பிரபலங்கள் நடித்துள்ளனர்.
இந்நிலையில், விஜய் மற்றும் விஜய் சேதுபதி இருவரும், இந்த படத்தின் கலை இயக்குனர் சதிஷ் அவர்களின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டுள்ளனர். அப்போது விஜய் சேதுபதி வழக்கம் போல் அனைவர்க்கும் முத்தம் கொடுப்பது போல, முதலில் சதீஸ்ஷிற்கு முத்தம் கொடுத்துள்ளார். அதனை தொடர்ந்து தளபதி விஜய்க்கும் முத்தம் கொடுத்துள்ளார்.
இந்த செய்தி இணையத்தில் பரவி வந்த நிலையில், விஜய் சேதுபதி, விஜய்க்கு முத்தமிட்ட புகைப்படத்தை வெளியிடுமாறு ரசிகர்கள் கேட்ட வண்ணம் உள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
” இது இந்தியாவின் போர் நடவடிக்கை! தக்க பதிலடி கொடுக்கப்படும்!” பாகிஸ்தான் கடும் கண்டனம்!
May 7, 2025
குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!
May 7, 2025