தமிழகத்தில் பிரபலமான சுற்றுலா தளங்களில் கன்னியாகுமரி முக்கியமானது. அங்க சுற்றிப்பார்க்க சூரிய உதயம் காண கடற்கரை, விவேகானந்தர் மண்டபம், காந்தி மண்டபம், திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் சிலை போன்ற பல இடங்கள் உள்ளன.
அதே போல கன்னியாகுமரி ரயில் நிலையம் அருகே உள்ள மாயாபுரி மெழுகு சிலை அருங்காட்சியகமும் மிகவும் பிரபலமானது. இந்த மெழுகுச் சிலை அருங்காட்சியகத்தில் இந்திய பிரபலங்கள் பலரது மெழுகு சிலை உள்ளது. இதில், முன்னாள் குடியரசுத்தலைவர் ஏபிஜே அப்துல் கலாம், அமிதாப்பச்சன், மன்மோகன் சிங், அன்னை தெரசா, மோகன்லால், ஷாருக்கான், பாரக் ஒபாமா என பலரது மெழுகுச் சிலைகள் இங்கு வைக்கப்பட்டுள்ளது.
இங்கு தமிழ் நடிகர்களின் மெழுகுச்சிலை இதுவரை வைக்கப்படாமல் இருந்தது. நிலையில் விஜய் மக்கள் மன்றம் சார்பில் தளபதி விஜய்யின் மெழுகு சிலையை தற்போது நிறுவியுள்ளனர். இதனை விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி அங்கு வரும் சுற்றுலா பயணிகள் பலரும் கண்டு ரசித்து செல்பி, போட்டோக்கள் என எடுத்து வருகின்றனர். தமிழ் சினிமா நடிகர்களில் முதன் முதலாக தளபதி விஜயின் மெழுகுசிலை வைக்கப்பட்டுள்ளதால், ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…