பிரபல டான்ஸ் மாஸ்டரான பிருந்தா தனது டுவிட்டர் பக்கத்தில் விஜய் மற்றும் சூர்யாவை குறித்து புகழ்ந்து தள்ளியுள்ளார்.
தளபதி விஜய் சிறந்த நடிகராக திகழ்வதோடு, கோலிவுட்டின் மிக சிறந்த டான்ஸர் என்பதும் அனைவரும் அறிந்ததே. பிரபலங்கள் பலர் நடிகர், நடிகைகளை குறித்து புகழ்ந்து வருவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் பிரபல டான்ஸ் மாஸ்டரான பிருந்தா அவர்களின் ட்வீட் ஒன்று சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. இவர் தனது டுவிட்டர் பக்கத்தில், விஜய்யுடன் இணைந்துள்ள புகைப்படங்களை வெளியிட்டு, இந்த புகைப்படங்கள் விஜய்யுடன் சர்க்கார் படத்தில் பணியாற்றிய போது எடுக்கப்பட்டது என்றும், அவருடன் பல படங்களில் பணியாற்றியுள்ளேன் என்றும், மிகவும் எளிமையானவர், அவர் அதிகம் பேசமாட்டார், ஆனால் அவரது கடின உழைப்பு பலரையும் பேச வைக்கும் என்றும், திறமையானவர் மற்றும் எளிமையான மனிதர் என்று புகழ்ந்துள்ளார்.
அதே போன்று சூர்யாவுடன் இணைந்துள்ள புகைப்படங்களை வெளியிட்ட பிருந்தா, சூர்யாவுடன் கஜினி, காக்க காக்க, ஆயுத எழுத்து, தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட பல படங்களில் பணிபுரிந்து உள்ளதாகவும், நான் பார்த்ததில் மிகவும் எளிமையானவர், பெண்களை மதிப்பவர், அவர் ஜென்டில்மேன் என்றும் கூறியுள்ளார். தற்போது அவரின் இந்த ட்வீட்டை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர். தற்போது பிருந்தா அவர்கள் துல்க்கர் சல்மானை வைத்து ஏய் சினாமிகா என்ற படத்தை இயக்குவது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…