கிணற்றில் விழுந்த நமீதாவை காப்பாற்ற ஓடிய கிராம மக்கள்! நடந்தது என்ன?

காட்டுப்பகுதியில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது, கிணற்றிற்குள் தவறி விழுந்த நடிகை நமீதாவை காப்பாற்ற கிராம மக்கள் ஓடினர். ஓடிய மக்களை படக்குழுவினர் தடுத்து நிறுத்தினர்.
இயக்குனர்கள் ஆர்.எல்.வி.ரவி மற்றும் மேத்யூ ஸ்கேரியா இணைந்து இயக்கும் திரைப்படம் ‘பௌவ் பௌவ்’. இந்த திரைப்படத்தை நடிகை நமீதா, முதன் முறையாக தயாரிக்கிறார். மேலும் இந்த படத்தில் அவர் முதன்முறையாக தயாரித்து உள்ளார். திருவனந்தபுரத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிற நிலையில், இப்படத்தின் முக்கிய காட்சி ஒன்றை காட்டுப்பகுதியில் படமாக்கினர்.
இந்நிலையில், காட்டுப்பகுதியில் நடைபெற்ற இந்த படப்பிடிப்பை பார்க்க, அப்பகுதியில் உள்ள மக்கள் திரண்டனர். இதனையடுத்து, அந்த படப்பிடிப்பின் போது, நமீதா ஒரு நடந்து சென்று கொண்டிருந்த போது, அவரது கையில் வைத்திருந்த அலைபேசி தவறி கிணற்றில் விழுந்தது. உடனடியாக நமீதா பதற்றத்தில் அதை தாவி பிடிக்க முயன்ற போது, கிணற்றிற்குள் விழுந்துள்ளார்.
கிணற்றிற்குள் விழுந்த நமீதாவை, கிராம மக்கள் காப்பாற்ற ஓடியுள்ளனர். படக்குழுவினர் அவர்களை தடுத்து நிறுத்திய நிலையில், இது படப்பிடிப்பில் உள்ள காட்சி என மக்கள் புரிந்து கொண்டனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025