குஜராத் வெள்ளபெருக்கு-பலி எண்ணிக்கை 126 ஆக உயர்வு..!

காந்திநகர்: குஜராத்தில் அதிகரித்து வரும் வெள்ளப்பெருக்கில் சிக்கி அவதிப்படுவோரில், இதுவரை 55 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் மீட்கப்பட்டுள்ளனர். 126 வெள்ளத்தில்

unknown node

காந்திநகர்: குஜராத்தில் அதிகரித்து வரும் வெள்ளப்பெருக்கில் சிக்கி அவதிப்படுவோரில், இதுவரை 55 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் மீட்கப்பட்டுள்ளனர். 126 வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு பரிதாபமாக பலியாகியுள்ளனர்.மேலும் பலரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அகமதாபாத் நகரில் மட்டும் கடந்த 24 மணிநேரத்தில், 1,400 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். ஆனால், பானஸ்கந்தா மாவட்டத்தில் தொடர்ந்து நிலைமை சிக்கலாக உள்ளது.வெள்ளப்பெருக்கு அதிகரித்தபடியே உள்ளதால், இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 126 ஆக உயர்ந்துள்ளது.