யாத்திரை சென்ற பக்தர்கள் 16 பேர் பலி.,

அமர்நாத்துக்கு யாத்திரை சென்ற பஸ் பள்ளத்தாக்கில் விழுந்ததில் பலியானவர்கள் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. 19 க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். சம்பவ இடத்தில்

unknown node

அமர்நாத்துக்கு யாத்திரை சென்ற பஸ் பள்ளத்தாக்கில் விழுந்ததில் பலியானவர்கள் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. 19 க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். சம்பவ இடத்தில் பக்தர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.நாடு முழுவதும் இருந்து அமர்நாத்துக்கு பக்தர்கள் லட்சக்கணக்கில் சென்று வருகின்றனர். இன்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் ராம்பன் மாவட்டத்தில் பக்தர்கள் சென்று கொண்டிருந்த பஸ் , பள்ளத்தாக்கில் நிலைதடுமாறி கவிழ்ந்தது. இச்சம்பவத்தில் 16 பேர் பலியாயினர். 19 பேர் காயமடைந்தனர். பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மேலும் பலரை தேடி கொண்டு இருகின்றனர்.