சத்தீஸ்கர் மாநிலம் ஜாஸ்பூர் நகரை சேர்ந்த ராட்டியா ராம்(79), ஜிம்னாபாரி பாய்(70) ஆகிய இருவரும் அரசாங்கம் கொடுக்கும் ஓய்வு ஊதியம் பணத்தை நம்பி தனிமையில் தங்கள் வாழ்க்கையை கழித்து வந்துள்ளனர்.இந்நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் அவர்கள் ஊரில் நடைபெற்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, ஒருவரையொருவர் சந்தித்துக்கொண்டனர்.முதல் சந்திப்பிலேயே ஒருவருக்கொருவர் பிடித்துபோய் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்துகொண்டுள்ளனர்.
அதனைத்தொடர்ந்து இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர், இவர்கள் திருமணத்தை அந்த ஊர்மக்கள் ஒன்று சேர்ந்து நடத்தி வைத்துள்ளனர்.
இதுவரை தனிமையில் வாழ்க்கையை நடத்தி வந்த இவர்கள் இருவரும் தொடர்ந்து அந்த ஊரிலேயே தங்கள் கடைசி காலத்தை கழிக்கவிருப்பதாக தெரிவித்துள்ளனர்.
காதல் எந்த வயதிலும் வரலாம் என்பதற்கு உதரணமாக இந்த 70 வயது காதல் ஜோடி வாழ்ந்து வருகின்றனர்..