உலக ஜிம்னாஸ்டிக் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனைக்கு பரிசுத்தொகை அறிவிப்பு!

தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ், சர்வதேச ஜிம்னாஸ்டிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்று சாதனை படைத்த புத்தா அருணா ரெட்டிக்கு 2 கோடி ரூபாய் பரிசாக

தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ், சர்வதேச ஜிம்னாஸ்டிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்று சாதனை படைத்த புத்தா அருணா ரெட்டிக்கு 2 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும் என  அறிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பெண்களுக்கான உலக ஜிம்னாஸ்டிக் போட்டியில்,  வெண்கலப் பதக்கம் இந்திய வீராங்கனையான புத்தா அருணா ரெட்டி  வென்றார். சர்வதேச ஜிம்னாஸ்டிக் போட்டியில், தனி நபர் பிரிவில் இந்தியர் ஒருவர் பதக்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.

unknown node

இந்நிலையில், பதக்கம் வென்ற அருணா ரெட்டி, தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவை, ஐதராபாத்தில் உள்ள பிரதி பவனில் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.  இதனையடுத்து அருணா ரெட்டிக்கு 2 கோடி ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கப்படும் என தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அறிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.