ஒரே ஒரு சதவீத பழைய ரூபாய் நோட்டுக்காகவா இவ்வளவு வாதை? மக்கள் உங்களை மன்னிக்கமாட்டார்கள் மோடி: யெச்சூரி சாடல்

கடந்தாண்டு நவம்பர் 8-ஆம் தேதி திடீரென தொலைக்காட்சியில் தோன்றிப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பழைய 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்கள் எல்லாம் இந்த நிமிடம்

unknown node

கடந்தாண்டு நவம்பர் 8-ஆம் தேதி திடீரென தொலைக்காட்சியில் தோன்றிப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பழைய 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுக்கள் எல்லாம் இந்த நிமிடம் முதல் செல்லாது என்றுஅறிவித்தார்.கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காகவே நான் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளேன்; இது ஒரு கசப்பு மருந்துதான் என்றாலும், அதைநாட்டின் வளர்ச்சிக்காக ஒவ்வொரு வரும் பொறுத்துதான் ஆக வேண்டும் என்றார். பல லட்சம் ரூபாய் கோடி கறுப்புப்பணம், வங்கிகளில் கொட்டப் போவதாக பாஜக-வினர் ஜம்பம் அடித்தார்கள். புதிய இந்தியா பிறந்துவிட்டதாக, துதிபாடிகள் வழக்கம் போல கிளம்பினார்கள். நாடெங்கும் ஒரே அலைக் கழிப்பு. வங்கிகள் முன்பு வரிசை.காசிருந்தும் கடைகளில் உணவுப்பொருட்களை வாங்க முடிய வில்லை. அன்றாடங் காய்ச்சிகள் பட்டினி கிடந்தார்கள்.கையில் இருந்தஒன்றிரண்டு 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்கு வங்கிக்கு ஓடி நூற்றுக்கும் மேற் பட்டோர் மிதிபட்டு செத்தார்கள். திருடர்கள் போல விரலில் மை வைக்கப்பட்டு அவமானத்தையும் சுமந்தார்கள். பணப்புழக்கமின்றி தொழில்கள் முடங்கின. வேலைவாய்ப்புக்கள் பறிபோயின. சிறுதொழில்கள் நசிந்தன. அனைத்தையும் மக்கள் சகித்துக் கொண்டார்கள். சித்ரவதையின் ஓராண்டு முடியப் போகிறது.இப்போது மோடி அரசு திடீ ரென ஒரு புள்ளிவிவரத்தை வெளி யிட்டுள்ளது. அதில், ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்பு நாட்டில் புழக்கத்திலிருந்த ரூ. 15 லட்சத்து 44 ஆயிரம் கோடியில், ரூ. 15 லட்சத்து 28 ஆயிரம் கோடி வங்கி சுழற்சிக்கு வந்துவிட்டதாக தெரிவித்துள்ளது.வெறும் 16 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே வங்கிக்கு வரவில்லை என்று தெரிவித்துள்ளது.98.6 சதவிகித பணம் வங்கியின் கணக்குக்குவந்து விட்டதாகவும் 1.4 சதவிகிதம் பணம் மட்டுமே வங்கிக் கணக்குக்கு வரவில்லை என்று கூறியுள்ளது. அதாவது இந்த 16 ஆயிரம் கோடி ரூபாய்தான் கண்டுபிடிக்கப்பட்ட கறுப்புப் பணமாம். முன்பு புழக்கத் க்கத்தில் இருந்த இந்த பணம் தற்போது புழக்கத்திலிருந்து தடுக்கப் பட்டுள்ளது. அவ்வளவுதான். இதைத்தான் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போதே பொரு ளாதார அறிஞர்கள் சொன்னார்கள். கறுப்புப் பணம் அனைத்தும் ரொக்க மாக இருப்பதில்லை. அவை, சொத்துக்களாக, முதலீடுகளாக, கள்ளச் சந்தை வர்த்தகமாக இருக் கின்றன. ரொக்கம் என்று பார்த்தால் அது மிகக் குறைவு ( இந்த 16 ஆயிரம் கோடி). அதை மீட்கிறேன் என்ற பெயரில் லட்சக்கணக்கான கோடி ரூபாய் அளவிற்கான தொழில் முடக்கத்தை, ஏற்படுத்த வேண்டாம் என்றனர்.ஆனால், இந்த 16 ஆயிரம் கோடி ரூபாயை மீட்பதற்கு, பழையநோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்து, புதிய ரூபாய் நோட்டுக் களை அச்சிடுவதற்கு மட்டும் தற்போது 21 ஆயிரம் கோடிகளை மோடி அரசு செலவிட்டிருக்கிறது. ஒருகேலிக்கூத்தான நடவடிக் கையை அரங்கேறி அவமானப் பட்டிருக்கிறது.ஊழலை ஒழிப்பதற்காகவும், கறுப்பு பணம், கள்ள நோட்டைஒழிப்பதற்காகவும், தீவிரவாதி களிடம் பணம் செல்வதை தடுப்பதற்காகவும் ரூபாய் நோட்டை மதிப்பி ழக்கச் செய்வதாக அறிவித்தார்கள்;ஆனால், இன்று 99.9 சதவிகித பணம் திரும்பி வந்து விட்டது; பணம் எடுக்க ‘கியூ’வில் நின்று 100 பேர் உயிர் இழந்தார்களே அதற்கு யார் பதில் சொல்வார்கள்? என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கேள்வி எழுப்பியுள்ளார்.ஏழை மக்களை கடும் பாதிப்புக்கு உள்ளாக்கிய, அவர்களின் வாழ்க்கையையும், வாழ் வாதாரத்தையும் நாசமாக்கிய; தொழிலாளர்கள் வேலை இழக்கச் செய்த மோடி அரசின் தேச விரோத செயலை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்றும் யெச்சூரி குறிப்பிட்டுள்ளார்.