லாலு பிரசாத் யாதவுடனான மோதலை அடுத்து தனது பதவியை ராஜினாமா செய்த பீகார் முதல்வர் நிதீஷ்குமார், பாஜக ஆதரவுடன் மீண்டும் முதல்வர் ஆகும் முயற்சியில் இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
பீகாரில்,லாலுவின் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம், நிதீஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தள கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்வராக நிதிஷ்குமார் உள்ளார். ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராக உள்ளார்.
லாலு பிரசாத் யாதவ்,கடந்த காங்கிரஸ் ஆட்சியில் மத்திய ரயில்வே அமைச்சராக இருந்த போது முறைகேடுகள் செய்து சொத்துக்கள் வாங்கி குவித்ததாக புகார்கள் எழுந்தன. தற்போது துணை முதல்வராக உள்ள, தேஜஸ்வி யாதவ் மற்றும் லாலுவின் குடும்பத்தில் உள்ள பிற உறுப்பினர்களின் பெயர்களில் ஏராளமான சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளதாக, சி.பி.ஐ., குற்றஞ்சாட்டி இருக்கிறது. . இதனால் தேஜஸ்வி பதவி விலக நிதிஷ் கெடு விதித்திருந்தார். ஆனால் தேஜஸ்வி பதவி விலக முடியாது என்று லாலு தெரிவித்தார்.
இந்த நிலையில், நிதிஷ்குமார் ஆளுநர் கேசவ்நாத் திரிபாதியை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். ஆளுநரும் நிதிஷ்குமாரின் ராஜினாமா மனுவை ஏற்றுக் கொண்டார்.
இதனிடையே, சுஷில் மோடி, நித்யானந்த் ராய் உள்ளிட்ட பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் நிதிஷ்குமார் வீட்டில் அவரை சந்தித்தனர். தொடர்ந்து ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இடையே ஆலோசனை நடைபெற்றது.
இந்நிலையில் 53 இடங்களை கொண்டுள்ள பா.ஜ.க நிதிஷ்குமாருக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
unknown nodeதமிழகத்தில் வருமான வரித்துறையை பயன்படுத்தி தமிழக ஆட்சியாளர்களை எவ்வாறு தனது கைகளுக்குள் வைத்துகொண்டதோ அதே வேலையை தான் தற்போது பிகாரிலும் நடத்திகொண்டிருபதாக எதிர் கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். ஏனெனில் சென்ற ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் பிஜேபிக்கும்,ராஷ்ட்ரீய ஜனதா தளம் காங்கிரஸுக்கும் தங்களது ஆதரவை தெரிவித்தன.
பிஜேபி தனது தகிடுதத்தை தற்போது பீகாரிலும் நடத்தி கொண்டிருகிறது.