வேலை செய்யாத மற்றும் லஞ்ச கரைபடிந்த அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு கட்டாய பணி ஓய்வு வழங்க உ.பி., அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அம்மாநில அரசு விரைவில் வெளியிட உள்ளது.அனைத்து கூடுதல் தலைமை செயலாளர்கள், முதன்மை செயலாளர்கள் மற்றும் துறை தலைவர்களுக்கு செப்.,8 ம் தேதி கடிதம் ஒன்று உ.பி., தலைமை செயலாளர் ராஜீவ் குமார் அனுப்பி உள்ளார். அதில், செயல்படாத மற்றும் லஞ்ச புகார்களுக்கு உள்ளான அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் பட்டியலை தயார் செய்து செப்.,15 க்குள் ஒப்படைக்க வேண்டும் எனவும், அவருக்கு கட்டாய பணி ஓய்வு வழங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது