ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கேரளாவில் கொடியேற்ற தடை...!

பாலக்காடு: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், பாலக்காடு மாவட்ட பள்ளி ஒன்றில் தேசிய கொடியை ஏற்றியுள்ளார். அரசியல் தலைவர் எப்படி பள்ளியில் கொடி ஏற்றலாம் என்று

unknown node

பாலக்காடு: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், பாலக்காடு மாவட்ட பள்ளி ஒன்றில் தேசிய கொடியை ஏற்றியுள்ளார். அரசியல் தலைவர் எப்படி பள்ளியில் கொடி ஏற்றலாம் என்று அந்தப்பள்ளி நிர்வாகத்துக்கு பாலக்காடு மாவட்ட ஆட்சியர் மெமோ அனுப்பியுள்ளார். இது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கேரளமாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ளது கர்ணகியம்மன் பள்ளி. இந்தப்பள்ளியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மூவர்ண தேசிய கொடியை ஏற்றினார். இதற்கு மாவட்ட ஆட்சியர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.பள்ளியின் முன்னாள் ஆசிரியர்கள் உள்ளிட்ட மூத்த பிரதிநிதிகளை வைத்து கொடியேற்றம் நிகழ்த்தியிருக்கலாம் என்று அப்போது விமர்சனம் எழுந்தது. அதற்கு பாஜகவினர் மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.இந்த நிலையில், பாலக்காடு மாவட்ட ஆட்சியர் கர்ணகியம்மன் பள்ளி நிர்வாகத்துக்கு மெமோ அனுப்பியுள்ளார். அதில், ‘ அரசியல் தலைவர் மோகன் பகவத், அரசு உதவி பெறும் பள்ளியில் தேசிய கொடி ஏற்றியது ஏற்கமுடியாத ஒன்று. பள்ளி ஆசிரியர் அல்லது மக்கள் பிரதிநிதிகள் யாரையாவது வைத்துதானே கொடி ஏற்றியிருக்க வேண்டும்.’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.ஏற்கெனவே கேரளாவில் ஆளும் இடது சாரி அரசுக்கும், பாஜக உள்ளிட்ட மதவாத அமைப்புகளுக்கும் இடையே முட்டல் மோதல்கள் அதிகரித்துள்ளன. இந்த நிலையில், மோகன் பகவத் பள்ளி விழாவில் தேசிய கொடி ஏற்றிய விவகாரம் மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.