சினிமா பாணியில் சிறுமியை கொலை செய்து கடைக்குள் புதைத்த கொடூரம்!!!

மகாராஷ்டிர மாநிலம் மிலிந்த் நகரைச் சேர்ந்த நபர்(37) ஒருவர் காய்கறி கடை நடத்தி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி, 3 மகன்கள் உள்ளனர். இதற்கிடையில் அதே பகுதியைச்

unknown node

மகாராஷ்டிர மாநிலம் மிலிந்த் நகரைச் சேர்ந்த நபர்(37) ஒருவர் காய்கறி கடை நடத்தி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி, 3 மகன்கள் உள்ளனர். இதற்கிடையில் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியிடம் அடிக்கடி பேச்சு கொடுத்துள்ளார். இதையடுத்து இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சிறுமி சில கோரிக்கைகளை முன்வைத்ததாகக் கூறப்படுகிறது. அதனால் ஆத்திரமடைந்த கடைக்காரர், சிறுமியை கொலை செய்துள்ளார். இதையடுத்து செய்வதறியாது திணறிய அவர், தனது கடைக்குள்ளே குழி தோண்டி புதைத்துள்ளார். தொடர்ந்து அப்பகுதி மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டு, போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.அவர்கள் விசாரணை மேற்கொண்டு, கடை முழுவதும் தோண்டியதில் சிறுமியின் உடல் கிடைத்துள்ளது. இதையடுத்து தப்பியோடிய கடைக்காரரை போலீசார் கைது செய்தனர். ஆனால் அவர் உடல்நிலை சரியில்லை என்று கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.